கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் உள்ள பாப்புலர் முதலியான பாசன வாய்க்காலை துார்வாரும் பணியை தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,
கரூரில் தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்! - TN RANSPORT MINISTER
கரூர்: மண்மங்கலம் பகுதியில் உள்ள பாப்புலர் முதலியார் பாசன வாய்க்காலை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் குடிமராமத்துப் பணிகள் மூலம் வாய்க்கால்களை தூர்வார தமிழ்நாடு அரசு ரூ. 500 கோடி ஒதுக்கி உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வாய்க்கால்களை துார்வார ஆறு கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளது.
கரூரில் 33 இடங்களில் ஆறு கோடியே 87 லட்சம் மதிப்பில் பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று மண்மங்கலம் பகுதியில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாலம் இன்று தூர்வாரப்பட தொடங்கியுள்ளது. மேலும், மழைக்காலங்கள் வருவதற்கு முன்னர் இந்தப் பணிகள் நிச்சயம் நிறைவேறும். இந்த வாய்க்கால் மூலம் 1,100 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடியது என்று அவர் கூறினார்.