தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிக மருத்துவ கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாடு - காரணம் சொல்லும் அமைச்சர்!

கரூர்: 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பணிநியமன ஆணையை வழங்கிய போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இந்தியாவில் அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றார்.

vijaya baskar
vijaya baskar

By

Published : Feb 7, 2020, 2:33 PM IST

கரூரில் உள்ள தாந்தோனிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு அரசின் சார்பில் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கலந்துகொண்டனர். மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், கூடுதல் மாவட்ட வேலைவாய்ப்பு பொறுப்பாளர் ராதிகா ஆகியோரும் உடனிருந்தனர்.

போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டிற்கு அதிக கல்லூரிகளை கொடுத்த அரசு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு. மேலும் இந்தியாவில் அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கு காரணமும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான்" என்றார்.

பணிநியமன ஆணையை வழங்கிய போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்

வேலைவாய்ப்பு முகாமின் மூலம் கரூர் மாவட்டத்தில் 550 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணிநியமன ஆணையை போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

இதையும் படிங்க: ”ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...” மிட்டாய் குதூகலத்தில் 90’ஸ் கிட்ஸ்..!

ABOUT THE AUTHOR

...view details