தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் மீண்டு வர சிறப்பு பூஜை! - minister mr vijayabaskar

கரூர்: போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

minister
minister

By

Published : Aug 19, 2020, 9:58 PM IST

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரோனா பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

எம்ஆர் விஜயபாஸ்கர் குடும்பத்தினரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோன்று அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் கரோனா பாதிப்பால் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், கரூர் மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வர தவிட்டுபாளையம் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

அப்போது, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதையும் படிங்க:நண்பனின் நினைவு தினத்தில், தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்திய நண்பர்கள்!

ABOUT THE AUTHOR

...view details