தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் விற்பனையை தடைசெய்ய வேண்டும் - வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர்! - பிளிப்கார்ட், அமேசான்

கரூர்: பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைத் தளங்களை தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trade association leader request to banned the online
Trade association leader request to banned the online

By

Published : Dec 19, 2019, 6:36 PM IST

கரூரில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஆன்லைன் வர்த்தகத்தால் நாடு முழுவதும் 37 விழுக்காடு சில்லறை வணிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆன்லைன் வர்த்தகம் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தை தகர்த்துவிட்டது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைத் தளங்களை தடைசெய்ய வேண்டும்.

வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் செய்தியாளர்ச் சந்திப்பு

இது குறித்து, வருகிற 6, 7, 8 ஆகிய தேதிகளில் அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் டெல்லியில் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்திடும் வகையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. இதில் பட்டினிப்போராட்டம், தொடர் கடையடைப்பு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தெலுங்கு நடிகர் ராம் சரணின் ஒயில்டு லைஃப் போட்டோகிராபி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details