கரூர் மாவட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான செயல்வீரர் மற்றும் வீராங்கனை கூட்டம் நடைபெற்றது. கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி பங்கேற்று முன்னிலை வகித்தார். இதில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அன்றாட செலவுக்கு பணமில்லை - அழகிரி - குற்றச்சாட்டு
மத்திய அரசிடம் அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லை அதனால்தான் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்தை எடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அழகிரி, ”அன்றாட செலவுக்குகூட மத்திய அரசிடம் பணம் இல்லாமல் ரிசர்வ் வங்கியில் இருக்கக்கூடிய உபரி நிதி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தன்வசப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தப் பணமானது பஞ்சம் அல்லது ஏதேனும் யுத்தங்கள் நடைபெற்றால் மட்டுமே செலவு செய்ய முடியும். ஆனால், மத்திய அரசு சட்டத்தை மீறி ரிசர்வ் வங்கியிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறது. இந்தியாவில் பஞ்சமோ, யுத்தமும் ஏதேனும் வந்திருக்கிறதா அதனால்தான் மத்திய ஆசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்தை எடுத்தீர்களா?
தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சென்றிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் துறைவாரியாக முக்கிய பொறுப்புகளை அந்தந்தத் துறையிடம் ஒப்படைத்து சென்றிருக்கவேண்டும். இது சட்டம் அல்ல மரபு” என்றார்.