தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் தொகுதியில் மட்டும் 90 வேட்புமனுக்கள் தாக்கல்!

கரூர்: மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 90 மனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன.

மனுக்கள் தாக்கல்
மனுக்கள் தாக்கல்

By

Published : Mar 20, 2021, 12:30 PM IST

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மார்ச் 12ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 19) வரை நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 46 வேட்பாளர்கள் 47 மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.

கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 90 வேட்பாளர்கள் 97 மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 32 வேட்பாளர்கள் 36 மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர். குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் 27 வேட்பாளர்கள் 31 மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 195 வேட்பாளர்கள் 211 வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.

மேலும் அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்களில் மாற்று வேட்பாளர்களும் தாக்கல்செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 90 மனுக்கள் தாக்கலாகியுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (மார்ச் 20) காலை 11 மணி அளவில் அந்தந்தச் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க...இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details