கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். அவர் இன்று தனது காரில் மனைவி திரிபுரசுந்தரி, மாமியார் சாவித்திரி ஆகியோருடன் கரூரிலுள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றார். தென்னிலை அருகே வீரன்காடு அருகே கார் சென்றுகொண்டிருந்த போது முன்பக்க டயர் வெடித்துவிட்டது. அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி பின்னர், அருகிலிருந்த கிணற்றில் கவிழ்ந்தது.
கிணற்றில் கவிழ்ந்த கார் - 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு - கரூர் மாவட்டச் செய்திகள்
கரூர்: வீரன்காடு அருகே டயர் வெடித்த கார் கிணற்றில் கவிழ்ந்ததால் அதிலிருந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமக உயிரிழந்தனர்.
-karur-car
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தென்னிலை பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன், காரிலிருந்த சங்கரின் மனைவி, மாமியார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சங்கர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் விபத்து குறித்து தென்னிலை காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி!