கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்தவர் உமேஸ்வரன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உப்பிடமங்கலம் கீழ்பாகம் சாலைப்பட்டியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர்கள் இருவரின் திருமணம் இன்று மணவாசியை அடுத்த கோரகுத்தி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் நடைபெற்றது. ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பாதுகாப்பு காரணமாக உமேஸ்வரன் - திவ்யா ஆகியோரின் திருமணத்தில் கூட்டம் அதிகம் இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் வெறும் 12 பேர் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தின்போது மணமக்கள் மற்றும் பொதுமக்களும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.