கரூர் மாவட்டம் சிந்தாமணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீத்தப்பட்டியில் வசித்து வருபவர் ராஜலிங்கம்(42). விவசாயியான இவர், மது அருந்திவிட்டு, தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் நேற்று (ஜூன் 15) விழுந்தார். இதையறிந்த அருகிலிருந்தவர்கள், தேவர்மலை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தையால் திட்டிய மதுப்பிரியர் கைது!
கரூர்: சீத்தப்பட்டி அருகே மதுபோதையில் கிணற்றில் விழுந்த ஒருவரை மீட்ட கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த அலுவலர், தீயணைப்புத் துறையினர், கிணற்றில் விழுந்த ராமலிங்கத்தை மீட்டனர். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலரை, தரக்குறைவான வார்த்தையால் திட்டி, ராஜலிங்கம் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் கிராம நிர்வாக அலுவலர், சிந்தாமணி காவல் நிலையத்தில் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தகாதவார்த்தை கூறி திட்டியதாகவும் ராஜலிங்கத்தின் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராஜலிங்கத்தை கைது செய்த காவல்துறையினர், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தை பயன்படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.