திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த மூன்று நாள்களாக டெக்ஸ் சிட்டி, கூடைப்பந்து கழகம், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டின் தலைசிறந்த 30 அணிகள் நாக்-அவுட் முறையில் பங்கேற்றது. காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என மூன்று கட்டங்களாக போட்டிகள் நடைபெற்றன.
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணி முதல் பரிசை வென்றது மார்ச் 7ஆம் தேதி இரவு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நேற்று (மார்ச்7) நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதல் பரிசையும், சிறுவாணி சேலம் அணி இரண்டாவது பரிசையும், வேளச்சேரி வாரியர்ஸ் சென்னை அணி மூன்றாவது பரிசையும், ஜி.டி.என் கல்லூரி திண்டுக்கல் அணி நான்காவது பரிசையும் தட்டிச் சென்றது.
இதையும் படிங்க :அமித் ஷா வருகை முதல் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்வரை... இன்றைய தேர்தல் சரவெடி