கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆலமரத்துப்பட்டி அருகே உள்ளது ஜங்கால்பட்டி. இங்கு வசித்து வந்த மறைந்த தங்கவேல் மனைவி பழனியம்மாள்(60), இவரது மகன் முத்துராஜ்(35), விவசாயக் கூலி வேலை செய்து வந்தார்.
முத்துராஜ் நாள்தோறும் மது அருந்தும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்.28) இரவு மது அருந்திய முத்துராஜ் அவரது வீட்டின் அருகாமையில் வசித்த ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த பழனியம்மாள் மதுபோதையில் இப்படி தவறு செய்யலாமா என மகனை தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் அருகில் மண் வெட்டுவதற்காக வைத்திருந்த கடப்பாறையை எடுத்து பழனியம்மாள் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மயக்கமாகி கீழே விழுந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் முத்துராஜா கைது செய்தனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் பெற்ற தாயை கடப்பாறையால் அடித்துக் கொலை செய்த மகன் கைதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி அருகே பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன்! - கரூர்
கரூர்: அரவக்குறிச்சி அருகே மதுபோதையில் பெற்ற தாயை கடப்பாறையால் அடித்து மகன் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சி அருகே பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன்!
இதையும் படிங்க:மே 2 அன்று முழு ஊரடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு