தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளியணை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு - Karur district Police

கரூர்: வெள்ளியணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் நகையைப் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறித்த வழிப்பறியர்கள்
பெண்ணிடம் நகை பறித்த வழிப்பறியர்கள்

By

Published : Apr 16, 2021, 4:40 PM IST

கரூர் தான்தோன்றிமலை அருகே உள்ள முத்தலாடம்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (36). இவர் வெள்ளியணை அருகே உள்ள பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கரூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அப்பெண்ணை வழிமறித்து, கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் சுமதி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 'கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்: லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரின் அதிரடி'

ABOUT THE AUTHOR

...view details