தமிழ்நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள் என அனைத்தையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடும் படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக கரூர் மாவட்டத்தில் 1,069 பள்ளிகள், 18 கல்லூரிகள், 1,052 அங்கன்வாடி மையங்கள், 13 திரையரங்குகள், 165 டாஸ்மாக் பார்கள் என அனைத்து வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.
மேலும் அங்கன்வாடியில் உணவருந்தும் குழந்தைகளுக்கு, 15 நாட்களுக்கான உணவு பொருட்களை, அவர்களது குடும்பத்திடம் வழங்கும் படி அங்கன்வாடி மைய அமைப்பாளர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரோனா வைரஸ் தாக்காமல் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வங்கப்பட்டு வருகின்றன.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக சுகாதார முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் பொதுமக்கள், அலுவலர்கள், பயணிகள் என அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தபடுகின்றனர்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாயனூர் கதவணை, காவேரி ஆறு, அம்மா பூங்கா உள்ளிட்ட இடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், தாங்கள் விடுமுறையில் இருப்பதால், சுற்றுலாத் தலங்களில் சுகாதார மையங்கள் அமைத்து, தங்களை பரிசோதித்த பின்னர் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், மாவட்ட பெருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், பயணிகளின் கைகளை கிருமி நாசினியால் கழுவிய பின்னருமே பேருந்துகளில் அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:கர்ப்பிணிக்கு மாற்று மருந்து தடவிய செவிலியர் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி