தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலை செய்ய வேண்டிய பணியை செய்து முடித்த ஊராட்சித் தலைவர்!

கரூர்: தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாயனூர் பகுதியின் ஊராட்சித் தலைவர் கற்பகவள்ளி ரகுபதி என்பவர் தேசிய நெடுஞ்சாலை துறை செய்யவேண்டிய பணிகளை தனது சொந்த செலவில் செய்துமுடித்தார்.

கரூரில் தேசிய நெடுஞ்சாலை செய்ய வேண்டிய பணியை செய்து முடித்த ஊராட்சி மன்ற தலைவ
தேசிய நெடுஞ்சாலை செய்ய வேண்டிய பணியை செய்து முடித்த ஊராட்சி மன்ற தலைவர்

By

Published : Jun 9, 2020, 3:53 AM IST

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாயனூர் பகுதி. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை ஓரங்களில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்து சிமெண்ட் சீட்டு மூலம் மூடப்பட்டு, இருபுறமும் சாலை செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது சிமெண்ட் சீட்டுகள் அனைத்தும் சேதமடைந்து இரவு நேரங்களில் மக்கள் விபத்துக்குள்ளாகி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊராட்சித் தலைவர் கற்பகவள்ளி ரகுபதி தற்காலிகமாக சேதமடைந்த சிமெண்ட் சீட்டுகளை மாற்றியுள்ளார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் அமைந்துள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு தபால் மூலம் தகவல் அளித்தும் இதுவரை எந்தவிதத்திலும் பதிலளிக்கவில்லை.

அதனால் சொந்த செலவில் பஞ்சாயத்து சார்பாக தற்காலிகமாக சிமெண்ட் தரைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம். இது தற்காலிகமானது, இது குறித்த நிரந்தர முடிவை தேசிய நெடுஞ்சாலை துறை உடனடியாக எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details