தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு போக்குவரத்துத் துறைதான் முதலிடம் - போக்குவரத்துத் துறை அமைச்சர் - the first tamilnadu Transport Department

கரூர்: போக்குவரத்துத் துறைக்கு மத்திய அரசு வழங்கும் 33 விருதுகளில் ஒன்பது விருதுகள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு கிடைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர்

By

Published : Sep 20, 2019, 5:22 PM IST

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மண்டலத்தைச் சேர்ந்த 892 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.219 கோடியே 80 லட்சம் மதிப்பிலான ஓய்வுதிய பண பலன் காசோலையை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

ஒய்வுதிய பணபலன்களை வழங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்

பின்னர் பேசிய அவர், ’தேசிய அளவில் போக்குவரத்துத் துறைக்கென மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 33 விருதுகளில் 9 விருதுகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரம்ப காலத்திலிருந்தே இந்தியாவில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறைதான் முதலிடம் பிடித்துவருகிறது’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details