தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளியில் வைத்து ஊழியரை பூட்டிச்சென்ற தலைமை ஆசிரியை; ஆசிரியர் சங்கம் கண்டனம்! - கரூர்

பள்ளியில் பணியாற்றும் இளநிலை உதவியாளரை பள்ளி வளாகத்திற்குள் வைத்து தலைமையாசிரியர் பூட்டிச்சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் வைத்து ஊழியரை பூட்டி சென்ற தலைமை ஆசிரியை; ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்
பள்ளியில் வைத்து ஊழியரை பூட்டி சென்ற தலைமை ஆசிரியை; ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

By

Published : Jul 26, 2022, 10:38 PM IST

கரூர்: அரசுப்பள்ளிகள் காலை 8 மணி முதல் 5:45 மணி வரை செயல்பட பள்ளிக்கல்வித்துறையால் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணியளவில் பள்ளி வகுப்புகள் நிறைவடைந்து மாணவர்கள் சென்ற நிலையிலும் அலுவலகப்பணி காரணமாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அந்தந்த அரசுப்பள்ளிகளில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நேற்று மாலை வழக்கம் போல 5.45-க்கு பள்ளி தலைமை ஆசிரியை உமா அலுவலகத்துக்குள் பணியாற்றிக்கொண்டிருந்த இளநிலை உதவியாளர் செல்வ கதிரவனை, தன் பணிகள் முடிவடைந்ததும் உள்ளே வைத்துபூட்டிச்செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப்பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய பள்ளித்தலைமை ஆசிரியை, நேரம் கடந்தும் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளே அவரை வைத்து பூட்டிச்சென்ற சம்பவம் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அரசுப்பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் மலைக்கொழுந்தன் இச்சம்பவம் தொடர்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறாமல் இருக்க, கரூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

பள்ளியில் வைத்து ஊழியரை பூட்டிச்சென்ற தலைமை ஆசிரியை; ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இதையும் படிங்க:'மாணவியருக்குத்தொல்லை தரும் இழி செயல் நடந்தால் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது' - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details