கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி 30 நாட்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். இதில் கரூர் மாவட்டம் மட்டுட்மின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக இன்று (ஏப்ரல் 10 ) முதல் திருவிழாக்கள் நடத்த தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் பிரத்யோக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ” கரோனா பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது ஆன்மீகப் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது.
ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மக்களின் குறைகளை இறக்கி வைக்கக்கூடிய இடமாகும். மேலும் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நல்ல ஒரு வாய்ப்பாகவும் அமையும். திருவிழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வாகும். மனக்குறைகளை தெய்வம் போக்க்கும் என நம்பி, பக்தர்கள் தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், தலை முடி காணிக்கை என நேர்த்திக் கடனை செய்து வருகின்றனர்.