தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை - Karur Income Tax Department Check

கரூர்: வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

By

Published : Jan 22, 2020, 7:03 AM IST

சென்னை அண்ணா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது வேலம்மாள் கல்விக் குழுமம். இதன் கீழ் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி போன்ற கல்வி நிறுவனங்களும், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன.

இங்கு மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் வேலம்மாள் (மெட்ரிக், சிபிஎஸ்சி) பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

மேலும் அவர்களது 10-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: வருமான வரித்துறை அலுவலர் வீட்டில் சிபிஐ சோதனை

ABOUT THE AUTHOR

...view details