தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவரைத் தாக்கிய ஆசிரியர் - நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை!

கரூர்: தனியார் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் வகுப்பாசிரியர் தாக்கிய சம்பவத்தை அடுத்து, அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

teacher-hitting-student-parents-request-to-take-action
teacher-hitting-student-parents-request-to-take-action

By

Published : Mar 8, 2020, 8:51 PM IST

கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசித்துவரும் மெக்கானிக் சுப்பிரமணியன் மகன் தமிழரசன் (15). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

நேற்று பள்ளிக்கு வழக்கம்போல் சென்ற தமிழரசன், வகுப்பிலுள்ள மாணவர்களுடன் பேசியதாகக் கூறி, அறிவியல் ஆசிரியர் தமிழரசனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் தாக்கியதில் தமிழரசனுக்கு கை, முகம் ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனைக் கண்ட அருகிலிருந்த சக மாணவன், அவரது தந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவரது தந்தை, ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:இரும்பு ஸ்கேலால் அடித்த அரசுப்பள்ளி ஆசிரியை: மாணவனுக்கு கண்ணில் பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details