கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியின் தமிழ் ஆசிரியர் தேவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாணவிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆபாசமாக புகைப்படங்களை அனுப்பியும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து அந்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
வாட்ஸ் ஆப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியருக்கு அடி உதை - talking obscenely to students through WhatsApp
கரூரில் வாட்ஸ் ஆப் மூலம் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
வாட்ஸ் ஆப் மூலம் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியருக்கு அடி உதை....
இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், லாலா பேட்டை போலீசார் ஆசிரியரின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில் மாணவிகளுக்கு ஆபாச செய்திகளும், புகைப்படங்களும் அனுப்பியிருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் - கூச்சலிட்டதால் தீ வைத்த கொடூரம்