அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி கரூர் மாவட்டத்தில் மதியம் 12 மணிமுதல் இரவு 9 மணிவரை சில்லறை மது விற்பனை அரசு மதுக்கடைகளில் நடைபெற்றுவருகிறது.
கரூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவிவருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியார் உணவகங்களில் இயங்கும் எஃப்.எல். மதுக்கூடங்கள் ஆகியவற்றை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மூட கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே அதிரடி உத்தரவிட்டுள்ளார்.