கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் அமைந்துள்ள அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். தொடர்ந்து வேலாயுதம்பாளையம், புஞ்சை புகலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு பணியாற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.