தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் கரூரில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மண்மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்மங்கலம், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, வாங்கல் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து குறைகளைக் கேட்கும் கூட்டம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கரூர் மாவட்ட திட்ட அலுவலர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘குடிநீர் பஞ்சமே இனி இருக்காது’ - எம்.ஆர். விஜயபாஸ்கர் - குறைதீர் கூட்டம்
கரூர்: மண்மங்கலம் பகுதிகளில் இனி குடிநீர் பஞ்சமே இருக்காது என தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ”இதற்கு முன்னதாக மண்மங்கலம் ஊராட்சியில் சீரான குடிநீர் கிடைப்பதற்கு சிறிது சிக்கல் இருந்தது. அதனை சரிசெய்யும் வகையில் குடிநீரை சேமிக்கும் தொட்டி கட்டப்பட்டு மக்களுக்குகுடிநீர் வழங்கப்பட்டது. இதேபோல், நடவடிக்கை எடுத்து உங்களது கிராமத்திலும் குடிநீர் பஞ்சம் தீர வழிவகை செய்யப்படும்” என்றார்.
பின்னர், கரூரையடுத்த தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள தேவையற்ற சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
TAGGED:
குறைதீர் கூட்டம்