தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் மோடி- பாஜக... அப்போ அதிமுக?

கரூர்: தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை

By

Published : Oct 6, 2020, 8:19 AM IST

கரூர் மாவட்டம் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இளைஞர் அணி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு இளைஞர்களிடம் உரையாற்றினார்.

அப்போது, இளைஞர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், புத்தகங்களைப் படிக்க வேண்டும், பேச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய கொள்கைகள் அனைத்தையும் பொதுமக்களிடம் விளக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி. வரவிருக்கும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வைத்து தான் பாஜக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும். இந்தி திணிப்பை பற்றி கூறிக் கொண்டு இருந்த திமுகவினர் தற்பொழுது பச்சைத் துண்டு அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இறுதியில் அனைவரும் காவி நிறத்துடன் இணைவார்கள்" என்றார்.

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்த ஒருவர் கூட அறிவிக்கப்படலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க:அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

ABOUT THE AUTHOR

...view details