தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் களைகட்டிய மஞ்சள், கரும்பு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி! - கரூரில் கலைகட்டிய மஞ்சள், கரும்பு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

கரூர்: பொங்கல் திருநாளை முன்னிட்டு மஞ்சள் கிழங்கு, கரும்புகளின் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

கலைகட்டிய மஞ்சள், கரும்பு விற்பனை
கலைகட்டிய மஞ்சள், கரும்பு விற்பனை

By

Published : Jan 15, 2020, 1:44 PM IST

உண்ணும் உணவை தன் வியர்வை சிந்தி உழைத்துக் கொடுக்கும் உழவர்களைச் சிறப்புக்கும்விதமாக தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அவ்வகையில் கரூர் மாவட்டத்தில் விற்கப்படும் கரும்பு, மஞ்சள் கிழங்கு ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு விற்பனைக்கு வருகிறது.

பொங்கல் பானையில் மஞ்சள் கிழங்கு கட்டி பானையின் பொங்கலிடுவது வழக்கம். அந்தவகையில் மஞ்சள் கிழங்கு 50 ரூபாயிலிருந்து 80 ரூபாய்வரை விற்பனையாகிறது. கரும்பு 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய்வரை விற்பனையாகிறது.

மேலும், பொங்கல் பண்டிகையின் முதல்நாள் வீட்டு வாசலில் தெய்வங்களை வரவேற்கும்விதமாக காப்புக்கட்டு என்ற பெயரில் ஆவாரம் தலை, பூழப்பூ, வேப்பிலை வீடுதோறும் வாசலில் கட்டி மகிழ்வார். இந்தப் பயிற்சி சாலை ஓரங்களிலும், வரப்பு ஓரங்களிலும் வளரக்கூடியது.

களைகட்டிய மஞ்சள், கரும்பு விற்பனை

கரூர் மாவட்டம் ஜெகதாபி, உப்பிடமங்கலம், அரவக்குறிச்சி பகுதிகளிலிருந்து பறித்துக்கொண்டுவந்து கரூர் நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், திண்ணப்பா கார்னர், லைட்டவுஸ் கார்னர், காமராஜ் மார்க்கெட், நகராட்சி வளாகம் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

கடந்தாண்டைவிட மழைப்பொழிவு அதிகமானதால் ஆவாரம் தலை, பூழப்பூ விளைச்சல் அதிகம் என்பதால் இந்தாண்டு வரத்து அதிகமாகியுள்ளது. ஆகையால் நான்கு கட்டு 10 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பெட்ரோல் டீசல் விலை உள்ளடக்கி ஓரளவு இந்தப் பூ விற்பனையில் லாபம் கிடைப்பதாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: களைக்கட்டிய பொங்கல் திருவிழா - சூடுபிடித்த விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details