தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் நிறுத்திவைப்பு! - குழந்தைத் திருமணம் நிறுத்திவைப்பு

கரூர்: பள்ளி சிறுமிக்கு திருமணம் ஏற்பாடுசெய்த குடும்பத்தினர் 6 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தைகள் காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.

பள்ளிச்சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் நிறுத்திவைப்பு
பள்ளிச்சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் நிறுத்திவைப்பு

By

Published : Jun 13, 2021, 2:19 AM IST

கரூர் மாவட்டம் வரவணை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்-காந்தமணி தம்பதியினர். இவர்களது மகள் புலியூர் அருகே உள்ள ராணி மெய்யம்மை பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்துவந்துள்ளார்.

இவருக்கும் பாளையம் அருகே உள்ள குஜிலியம்பாறை முத்தம்பட்டி பெரியசாமி மகன் கார்த்திக் (28) என்பவருக்கும் திருமணம்செய்ய இரு வீட்டார் சம்மதத்துடன் ஏற்பாடுசெய்துள்ளனர். இந்தத் திருமணத்தை பெண்ணின் மாமா சங்கர் குடியிருக்கும் கரூர் தெற்கு காந்திகிராமம், இந்திரா நகர் பகுதியில் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், தாந்தோணி வட்டார சமூக நலத்துறை அலுவலர் சரஸ்வதி சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று பெண்ணின் திருமண வயது குறித்து ஆதாரம் கேட்டபோது ஆதார் அட்டையில் 2002ஆம் ஆண்டு பிறந்ததாக இருந்தது.
இதில் சந்தேகமடைந்த சமூக நலத்துறை அலுவலர்கள் சிறுமி படித்த பள்ளியில் அணுகி பிறந்த தேதியை சரி பார்த்தபொழுது 2005ஆம் ஆண்டு பிறந்ததாகவும் தற்போது 16 வயது பூர்த்தி அடைந்துள்ளதும் தெரியவந்தது.

இந்நிலையில், விரைந்து சென்று சிறுமியை மீட்டு குளித்தலை இந்திராநகர் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் சமூக நலத்துறை அலுவலர் சரஸ்வதி அளித்த புகார் அடிப்படையில் மணமகன் கார்த்தி (28) அவரது தந்தை செல்வம், தாய் காந்தமணி, சிறுமியின் தந்தை பெரியசாமி, தாய் காமாட்சி, மாமா சங்கர் ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறைக்கு அனுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details