தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.25) 4ஆம் நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு அங்கேயே தங்கி அடுத்த நாள் போராட்டத்தையும் தொடர்ந்து வருகின்றனர்.
கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ரத்னமாலா செய்தியாளர்களிடம் பேசியதாவது,
“110 விதியின் கீழ் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அறிவிப்பின்படி, அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நடப்பு இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம்.
‘கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும்’ தமிழ்நாடு அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு செய்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும்” என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: குலசேகரம் அருகே கல்லூரி மாணவி மாயம்!