தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப்போட்டி - பள்ளி மாணவர்கள் பங்கேற்பு! - தமிழக போக்குவரத்துறை அமைச்சர்

கரூர்: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ, வாள் சண்டை, சிலம்பம் போட்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

Statewide Judo Games
Statewide Judo Games

By

Published : Jan 23, 2020, 2:49 PM IST

கரூர் மாவட்டத்தில் உள்ள அட்ரஸ் கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான ஜூடோ, வாள் சண்டை, சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1728 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கரூர் ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையேற்றனர். இப்போட்டியானது 14 ,17 ,19 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் தனித்தனியாகப் பங்கேற்றனர்.

மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப்போட்டி

மாநில அளவிலான இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1200, இரண்டாம் பரிசு ரூ. 800, மூன்றாம் பரிசாக ரூ. 500, சான்றிதழ்கள், கேடயம் ஆகியவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத் துறை சார்பில் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: உதகையில் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா

ABOUT THE AUTHOR

...view details