கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர்,
தற்போது நடைபெறவிருக்கும் நான்கு இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் தேர்தல் பரப்புரைக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்தத் தொகுதியில்தான், திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அதிக வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறபோகிறார்.
மேலும், அவர் இந்த தொகுதிக்காக பல்வேறு புதிய திட்டங்களை வகுத்துள்ளார். ஆனால் அவரது பதவி பறிக்கப்பட்டதால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது. எனவே அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம்.
தேர்தலில் வெற்றி பெற்று அவர் அதனை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார். அதனால் அவருக்கு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.