உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் கரோனா வைரஸ் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரோனாவில் இருந்து செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி அங்கபிரதோஷம் - Karur Latest News
கரூர் : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிலிருந்து குணமடைய வேண்டி பாலாஜி என்பவர் தனது குடும்பத்தாருடன் அங்கபிரதோஷம் மேற்கொண்டார்.
அவர் பூரண குணமடைந்து மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக கருவை பாலாஜி என்பவர் சுங்ககேட் பகுதியில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலில் தனது குடும்பத்தாருடன் அங்கபிரதோஷம் செய்து வழிபட்டார்.
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் நோய்த்தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதன் மூலம் கரூர் மாவட்டத்தில் பிரார்த்தனை வழிபாடு, அன்னதானம், அங்க பிரதோஷம் போன்ற வழிபாடுகளை பலர் செய்து வருவது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.