தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் அருகே தாய் இறந்த விரக்தியில் மகன் தற்கொலை! - Karur District News

கரூர்: தாய் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்த தாய்,மகன்

By

Published : Nov 5, 2019, 11:22 PM IST

கரூர் அடுத்த வெங்கமேடு புதுகுளத்துப்பாளையம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அமுதவல்லி(65). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சைப் பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அவர், நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கியபோது, விஷம் அருந்தியுள்ளார். இதையறிந்த அவரது மகன் ராஜரத்தினமும் விஷம் அருந்தியுள்ளார். இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அமுதவல்லி இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைபோல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராஜரத்தினமும் மாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தாய், மருந்து குடித்த விரக்தியில் ராஜரத்தினமும் மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

மேலும் தற்கொலை செய்துகொண்ட ராஜரத்தினத்திற்கு மனைவி மற்றும் 12 வயதில் மகனும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details