தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்கறி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தல்: 3 பேர் கைது - Smuggling of liquor bottles

கரூர்: காய்கறி லாரியில் மதுபாட்டில்களை கடத்திய மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காய்கறி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தல்
காய்கறி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தல்

By

Published : May 31, 2021, 3:43 PM IST

கரூர்-நாமக்கல் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக ஓசூரில் இருந்து மதுரைக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை நிறுத்தி, சோதனை செய்ததில் கர்நாடகாவைச் சேர்ந்த 14 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுநரும் குன்னம்பட்டியைச் சேர்ந்தவருமான ராஜேந்திரன்(27) மற்றும் செல்வராஜ்(41) ஆகியோரை வேலாயுதம்பாளையம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை சோதனையிட்டதில், அதில் 48 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநர் மானாமதுரை பூவந்தி, மேலகாலனியைச் சேர்ந்த முருகன்(34) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெவ்வேறு இடங்களில் காய்கறி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் சரிவைச் சந்தித்துவரும் கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details