கரூர் மாவட்டம், திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நகரப் போக்குவரத்து காவல் துறை, தனியார் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் தொலைக்காட்சி சார்பில் போக்குவரத்து விழிப்புணர்விற்கான ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேரணியைத் தொடங்கி வைத்தார்.
கரூரில் ஸ்கேட்டிங் பேரணி மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு செய்த மாணவர்கள்
கரூர்: போக்குவரத்து விழிப்புணர்விற்கு ஸ்கேட்டிங் பேரணியினை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
Karur
பேரணியில் அதிக பாரம் ஆபத்தில் முடியும், சாலைவிதிகளை மதிப்போம், மரணத்தினை தவிர்ப்போம், மிதவேகம் மிக நன்று உள்ளிட்ட துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் பொது மக்களிடையே அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கரூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இப்பேரணி நகரப் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் முடிந்தது.
இதையும் படிங்க:சென்னை பேருந்துகளில் புதிய வசதி - போக்குவரத்துக் கழகம் முடிவு!