கரூர் வ.உ.சி தெருவில் வசித்துவரும் வெங்கடேசன்(33) என்பவருக்கும், அவரது உறவினர் மாயாண்டி(25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக, மதுபோதையில் இருந்த மாயண்டி, வெங்கடேசனிடம் நேற்று (மே 21) தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சண்டையில் அரிவாளால் வெங்கடேசனை வெட்ட முயற்சித்துள்ளார் மாயாண்டி. அப்போது வெங்கடேசன் தப்பிவிட, எதிர்பாராதவிதமாக அருகிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலா(13), தவசிகா( 11) ஆகிய இரு சிறுமிகள் தாக்கப்பட்டனர்..