கரூர்: திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலரான பிரசாந்த் மு. வடநேரேவைச் சந்தித்து வாக்குப்பதிவின்போது காவல் துறையினர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகப் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நேற்று (ஏப். 5) இரவு கரூர் வெங்கமேடு திமுக தேர்தல் பணிமனையை கரூர் மாவட்ட காவல் கூடுதல்கண்காணிப்பாளர், கரூர் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் அத்துமீறி அகற்றியுள்ளனர்.
மேலும் கரூர் நகராட்சிப் பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிலும், ஊராட்சிப் பகுதிகளில் 200 மீட்டர் தொலைவிலும் கட்சியினர் பணியாற்றத் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
அவ்வாறு உரிய இடத்தில் நின்று திமுக கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் பணியாற்றினாலும் காவல் துறை அதிரடிப் படையினரைக் கொண்டு அடித்து விரட்டிவிடுகின்றனர்.