முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 பேரிடம் ரூ.95 லட்சம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், சென்னையில் இருந்து வந்து குற்றப்பிரிவு சிறப்பு காவல் துறையினர் அவரது வீடு, கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் செந்தில் பாலாஜியின் டெக்ஸ்டைல்ஸ் அலுவலகம் உள்ளது. அங்கு, விசாரணை மேற்கொள்வதற்காக சென்னை காவல் துறையினர் வந்தபோது, திமுக நிர்வாகிகள், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.