குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில், மூன்று நிலையான தேர்தல் பறக்கும் படையினரும், மூன்று நகரும் தேர்தல் பறக்கும் படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், இன்று (மார்ச்.21) காலை குளித்தலை அருகே உள்ள அய்யர் மலை, சிவாயம் பிரிவு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, குளித்தலையில் இருந்து மருங்காபுரி நோக்கிச் சென்ற வேனை நிறுத்தி, கண்காணிப்புப் படை அலுவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் வாகனத்தை சோதனை செய்தனர்.
உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1,35,780 ரூபாய் பறிமுதல்
கரூர்: குளித்தலை அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1,35,780 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,35,780 பறிமுதல்
இச்சோதனையில், வாகனத்தில் சென்ற வீரமலை என்பவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த இருந்த 1,35,780 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், குளித்தலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தியிடம் அத்தொகை ஒப்படைக்கப்பட்டு, மேற்படி பாதுகாப்பிற்காக சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவை கலாய்த்த முதலைமைச்சர் முதல் மூதாட்டியிடம் வம்பிழுத்த மன்சூர் அலிகான் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்