கரூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
கரூர் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தெத்துப்பட்டி காட்டூர் பிரிவு சாலையில் பறக்கும்படை அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கரூர் வையாபுரிநகர்-இனாம் நகரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரைச் சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 300 ரூபாய் கொண்டுசெல்லப்பட்டது கண்டறியப்பட்டது.
பறிமுதல்செய்யப்பட்ட தொகை அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வனிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவைத் தொடர்ந்து தொகை அரவக்குறிச்சி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கரூரில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்: பறக்கும் படையினர் விசாரணை - கரூர் செய்திகள்
கரூர்: இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டு பறக்கும் படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
![கரூரில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்: பறக்கும் படையினர் விசாரணை ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11283019-448-11283019-1617603472812.jpg)
ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்