கரூர் மாவட்டத்தில் மனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். எனவே, கண்காணிப்பு பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்று காலை 4 மணி அளவில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பறக்கும் படை குழு மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, நாமக்கல் மாவட்டம் பொன்மணி கோழிப்பண்ணை S.P புதூர் பரமத்தி ரோடு என்ற முகவரி நோக்கி சென்ற முட்டை லாரியை சோதனை செய்தனர். வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் லத்துவாடி சுப்பிரமணி என்ற முகவரியை சேர்ந்த லாரி ஓட்டுநரிடம் ரூ 5,25,025 இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதால் தொகை ரூ.5,25,025 பறிமுதல் செய்யப்பட்டது.