தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபாசமாகப் பாடம் எடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் - ஆபாசமாக பாடம் எடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

கரூரில் ஆபாசமாகப் பாடம் எடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் பணியிடை நீக்கம்
ஆசிரியர் பணியிடை நீக்கம்

By

Published : Dec 2, 2021, 9:36 PM IST

கரூர்: பாகநத்தம் பகுதியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அறிவியல் ஆசிரியராக பன்னீர்செல்வம் (46) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் மிகவும் ஆபாசமாக நடத்தியுள்ளார்.

ஆபாசமாகப் பாடம்

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவின்பேரில், கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் விஜயேந்திரன், தாந்தோணி வட்டாரக் கல்வி அலுவலர் ரமணி ஆகியோர் அப்பள்ளியில் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஆசிரியர் பன்னீர்செல்வம் ஆபாசமாக பாடம் நடத்தியது தெரியவந்தது.

ஆசிரியர் பணியிடை நீக்கம்

ஆசிரியர் பணியிடை நீக்கம்

அதன் அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்தனர். விசாரணைக்குழு அளித்த அறிக்கையின்படி, மாவட்டக் கல்வி அலுவலர் விஜயேந்திரன் சம்பந்தப்பட்ட அறிவியல் ஆசிரியர் பன்னீர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பாலியல் ரீதியான விழிப்புணர்வு கருத்துகள் மாணவர்களால், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதே இப்புகாருக்குக் காரணம் என ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details