போகி பண்டிகையில் பழையன கழிந்து புதியன புகுதல் என்ற நோக்கத்தில் பழைய பொருட்களை தீயிலிடுவது ஆகும். இந்நிலையில்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பகுதியில் இருக்கக்கூடிய அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பசுமைப் படை மூலம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பேரணி நடைபெற்றது.
புகையில்லா போகி கொண்டாட்ட விழிப்புணர்வு பேரணி இந்த பேரணியில் சுற்றுச்சூழல் தொடர்பான பசுமை படை மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான டீக்கடை, பள்ளி வளாகம், நியாய விலை கடை, கோயில்கள் முன்பு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியில் தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'தமிழரின் பொங்கல் கலாசாரம் பெருமை மிக்கது' - வியக்கும் சீன மாணவிகள்