கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள வடசேரி கிராமத்தில் ஊராட்சி நடுத்தெருவில் வசிப்பவர்கள் பால்ராஜ் - கோமதி தம்பதியினர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மகன் பரணி வயது 14, மகள் யுவஸ்ரீ வயது 10.
பால்ராஜ் மொத்த விலையில் மளிகைப் பொருள்களை கடைகளுக்கு வீதி வீதியாக விற்பனை செய்து வருகிறார். தாயார் கோமதி பிள்ளைகளை வீட்டில் இருக்கும்படி கூறிவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போது பரணி மற்றும் யுவஸ்ரீ இருவரும் அருகில் உள்ள இந்த நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது யுவஸ்ரீ சிறுநீர் கழிப்பதற்காக அருகிலுள்ள ஏரிக்கு சென்றுள்ளார்.
நீரில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு
கரூர்: தோகைமலை அருகே வடசேரி பகுதியில் நீரில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
karur
அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்தார். இதனைக்கண்ட பரணி அருகில் உள்ளவர்களை கூச்சலிட்டு அழைக்க அவர்கள் திருச்சியிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவஸ்ரீ உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, பால்ராஜ் தோகைமலை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்து உள்ளார். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.