கரூரில் மதுரை - சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பரணிபார்க் கல்விக் குழுமத்தின் சார்பாக பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தனியார் பள்ளியிலிருந்து 10, 11, 12ஆம் வகுப்புகளைச் சேர்நத் 500க்கும் மேற்பட்டோர் மாணவ, மாணவிகள் வரவிருக்கும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் பல்வேறு நலன்கள் பெறவும் தங்களது பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர். .
இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆசி வழங்கியதோடு வரவிருக்கும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.