கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கும் கண்காட்சி, கரூரில் உள்ள சேலம்-மதுரை சாலையில் அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பள்ளி மாணவ - மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல், மழைநீர் சேகரிப்பு உயிரினங்களில் விலங்குகள், மின்சாரம் சேகரிப்பு, சுகாதாரம், காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தி தங்களின் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் மின்சாரம் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு! இதையும் படியுங்க:கரூரில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி