தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவியல் ஆய்வகம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப் இந்தியா இணைந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சில போட்டிகளை நடத்திவருகின்றன.
இதில் கலந்துகொண்ட கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 5 பேர், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 30 கிராம் எடையுள்ள வாட்டர் சாட்-30 என்ற புதிய செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டுவருகின்றனர். நிலத்தில் சுமார் 160 அடி ஆழத்திற்கு சீமைக்கருவேல மரங்களின் வேர்கள் சென்று நீர்மட்டத்தை குறைத்துவருவதால், அவற்றை முற்றிலும் அகற்ற இந்த மாணவர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர். அதனடிப்படையில் சீமைக்கருவேல முட்களின் இலை, காய், பூ, விதை, பட்டை ஆகியவற்றைத் திண்ணமாக மாற்றி அதை 6 அடுக்குகளாக 30 கிராம் எடையுள்ள செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளனர்.
செயற்கைக்கோள் உருவாக்கி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு விண்ணில் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும்போது அங்குள்ள தட்பவெப்பநிலை, வளிமண்டல அழுத்தம் சூரிய கதிர்வீச்சு ஆகியவற்றால், விண்ணில் இந்த படிமங்கள் என்ன மாறுபாடு ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க முடியும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நவீன்குமார், சுகந்த், பசுபதி, ஜெகன், சுகி ஆகிய ஐந்து மாணவர்கள் 30 கிராம் எடையுள்ள புதிய செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைக்கோள் ஆகஸ்ட் 11ஆம் தேதி பலூன் சாட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.