கரூர்:வேலாயுதம்பாளையம் புஞ்சை புகலூர் பேரூராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜூலை 8) காலை 6 மணியளவில் பணியை புறக்கணித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் - கரூர் புஞ்சை புகலூர் பேரூராட்சி
மாத ஊதியத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வலியுறுத்தி கரூர் வேலாயுதம்பாளையம் அருகே புஞ்சை புகலூர் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், "ஒப்பந்த பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தாத காரணத்தினால், காலையில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டோம்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை - 4 பேர் கைது