ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மகிண்டி விலக்கு ரோட்டில் கீழத்தூவல் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை பிடித்து விசாரணை நடத்தினர்.
மணல் திருட்டு: லாரி பறிமுதல்; ஓட்டுநர் கைது! - காவல்துறை விசாரணை
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sand theft: truck seizure; Driver arrested!
விசாரணையில், கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புழுதிகுளம் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் திருடப்பட்டது தெரியவந்தது. பின் திருட்டு மணல் ஏற்றி வந்த பரமக்குடி ராம்நகரைச் சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்த காவல்துறையினர், மணல் ஏற்றி வந்த லாரியையும் பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.