தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3.65 லட்சம் மதிப்பிலான ஆவணமில்லா பணம் பறிமுதல்

கரூர்: தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

3.65 லட்சம் மதிப்பிலான ஆவணமில்லா நகை, பணம் பறிமுதல்
3.65 லட்சம் மதிப்பிலான ஆவணமில்லா நகை, பணம் பறிமுதல்

By

Published : Mar 30, 2021, 11:47 AM IST

கரூர் கிருஷ்ணராயபுரம் தொகுதி, பள்ளாபாளையம் பிரிவு என்ற இடத்தில் நிலையான கண்காணிப்பு குழு (SST) அலுவலர் பாரதி தலைமையில் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கோயம்புத்தூரைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த பிரபு இருவரும் காரில் வந்தனர். அந்தக் காரினை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து, அந்தப் பணத்திற்குண்டான ஆவணங்கள் இல்லாத நிலையில், காவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான மகுடீஸ்வரனிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து தொகை சார் கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் ஒரே நாளில் 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details