தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளித்தலை அருகே ஓடும் காரில் திடீர் தீ! - driver had been safe

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை அருகே ஓடும் காரில் திடீர் தீ-  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!
குளித்தலை அருகே ஓடும் காரில் திடீர் தீ- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

By

Published : Apr 17, 2022, 1:13 PM IST

கரூர்:திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற பாலமுருகன் என்பவர், முசிறியில் உள்ள நண்பரை சந்தித்து விட்டு மீண்டும் குளித்தலை வழியாக திருச்சிக்கு இண்டிகா காரில் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது குளித்தலை அருகே உள்ள நாப்பாளையம் பகுதியை சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் இன்ஜின் பகுதியிலிருந்து புகையுடன் நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது.

புகையை கண்டவுடன் உடனடியாக சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு பாலமுருகன் காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தீயணைப்பு துறையின தீயை அணைத்தனர்.

குளித்தலை அருகே ஓடும் காரில் திடீர் தீ- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து குளித்தலை போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமீப காலமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் தற்போது குளித்தலை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரினால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'என் காருக்கு நானே தீ வைத்தேன்' - பகீர் வாக்குமூலம் கொடுத்த பாஜக பிரமுகர்... மனைவி டார்ச்சரால் நிகழ்ந்ததா விபரீதம்?

ABOUT THE AUTHOR

...view details