தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர்களிடம் வழிப்பறி - குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு!

கரூர்: மாக்கம்பாறை அருகேயுள்ள அரசு மதுபானக் கடையின் விற்பனையாளர்களைத் தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

robbery-to-tasmac-sellers-police-web-for-criminals
robbery-to-tasmac-sellers-police-web-for-criminals

By

Published : Aug 26, 2020, 10:34 PM IST

கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாக்கம்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான மதுபானக் கடை உள்ளது.

இக்கடையில் மதுபானங்களை நேற்று (ஆக.25) விற்பனை செய்துவிட்டு கடையை மூடும் தருவாயில், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர், பணியில் ஈடுபட்டிருந்த தாந்தோனிமலை பகுதியைச் சேர்ந்த கடையின் விற்பனையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கடவூர் வீரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சூப்பர்வைசர் மணிவேல் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி மதுபானங்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் மதுபானங்களைத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கடையில் மது விற்று வைத்திருந்த 15,000 ரூபாய் பணம், விற்பனையாளர்களின் செல்போன், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை பறித்துக்கொண்டு, அவர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதில் படுகாயமடைந்த மதுபானக் கடை ஊழியர்களை மீட்டு அருகிலிருந்தவர்கள், அவர்களை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவன் கைது!

ABOUT THE AUTHOR

...view details